விவசாயிகளுக்கு பராமரிப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு பராமரிப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு பராமரிப்பு பயிற்சி
ADDED : செப் 16, 2025 04:08 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி ஆழ்வார் கூட்டத்தில் மைக்ரோ பாசன யூனிட்டின் தானியங்கி இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் தலைமை வகித்தார்.
மைக்ரோ மற்றும் ட்ரிப் பாசனத்தின் தண்ணீர் சேமிப்பு பயன்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் ஹேமலதா முன்னிலை வகித்தார். வேளாண் உதவி அலுவலர் முருகேசன் வரவேற்றார். ஸ்பிரிங்லர் உள்ளிட்ட பிற பாசன முறைகளின் பயன்கள் மற்றும் பராமரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் ஜோசப் செய்திருந்தார்.