/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை: தாய்மார்கள் சிரமம் பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை: தாய்மார்கள் சிரமம்
பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை: தாய்மார்கள் சிரமம்
பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை: தாய்மார்கள் சிரமம்
பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை: தாய்மார்கள் சிரமம்
ADDED : செப் 01, 2025 10:07 PM

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி பஸ்ஸ்டாண்டில் பயன்பாடு இல்லாமல் பாலுாட்டும் அறை பூட்டி கிடக்கிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர்.
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமநாதபுரம், துாத்துக்குடி, திருச்செந்துார் உள்ளிட்ட வெளியூர் மற்றும் உள்ளூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் பஸ் ஸ்டாண்டில் தாய்மார்கள் வசதிக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்டியுள்ளனர். இதனால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட மறைவான இடத்தை தேடிச்சிரமப்படுகின்றனர்.
எனவே பாலுாட்டும் அறையை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.