/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் உதாசீனம் ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் உதாசீனம்
ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் உதாசீனம்
ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் உதாசீனம்
ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் உதாசீனம்
ADDED : ஜூன் 16, 2025 03:27 AM
திருப்பூர் : ''ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ளூர் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில், பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் எந்தவித தடங்கல்களும் இன்றி, தனி வழியில் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
சமீப காலமாக, திராவிட மாடல் தி.மு.க., அரசு, மக்களையும், கோவிலையும் பிரிக்கும் சூழ்ச்சியில், உள்ளூர் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு, உள்ளூர் பக்தர்களை உதாசீனப்படுத்தி கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் மட்டுமல்லாமல், திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை, திருத்தணி போன்ற பல்வேறு ஆன்மிகத் தலங்களிலும் உள்ளூர் பக்தர்களை அனுமதிக்காமல், அறநிலையத்துறை பக்தர்களை அவமதித்து வருகிறது.
கோவிலுக்குள், உள்ளூர் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.