/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கைக்கு கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கைக்கு கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூன் 16, 2025 03:28 AM

ராமநாதபுரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சாவை, இலங்கை ராணுவ புலனாய்வு துறையினர் படகுடன் பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றன. நேற்று அதிகாலை, தமிழகத்திலிருந்து பைபர் படகில் யாழ்பாணம் வரமாராட்சி பொலிகண்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக இலங்கை ராணுவ புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு ராணுவ புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு பைபர் படகில் இருந்து இருவர் கடலுக்குள் குதித்து தப்பினர். அந்த படகை சோதனையிட்ட போது, 98 பொட்டலங்களில், 220 கிலோ கஞ்சா, தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து கடத்தியவர்கள் குறித்து இலங்கை ராணுவ புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர்.
இந்த கஞ்சாவின் இந்திய மதிப்பு, 50 லட்சம் ரூபாய். இலங்கை மதிப்பு, 2.94 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.