/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாலம், ரோடு அமைத்து தர வலியுறுத்தல் பாலம், ரோடு அமைத்து தர வலியுறுத்தல்
பாலம், ரோடு அமைத்து தர வலியுறுத்தல்
பாலம், ரோடு அமைத்து தர வலியுறுத்தல்
பாலம், ரோடு அமைத்து தர வலியுறுத்தல்
ADDED : மே 30, 2025 11:42 PM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா இருதயபுரம் அருகேயுள்ள கருப்பகுடும்பன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டப்பொருளாளர் சதிஸ்குமார் உள்ளிட்ட ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில் கருப்பகுடும்பன் பச்சேரி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் கனரக வாகனம் செல்லும் போது சிறுபாலம் சேதமடைந்து அதிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக கருப்பகுடும்பன் பச்சேரி, மருதன் பச்சேரி, ஆவான்பச்சேரி, பொய்யான் குடியிருப்பு ஆகிய கிராம மக்கள் வாகனங்கள், நடந்து செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. குறிப்பாக விவசாயப்பணி, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடந்தும், வாகனங்களில் செல்கின்றனர்.
எனவே மக்களின் நலன்கருதி விரைவில் பாலத்தை சீரமைத்து, புதிதாக தார்சாலை அமைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.