ADDED : மே 30, 2025 11:41 PM

கமுதி: கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் சோலார் பேனல் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.
கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1992-1994 ஆண்டு வரை பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாகக் குழு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அப்போது முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளியின் மின் கட்டணம் அதிகமாக வருவதை தடுப்பதற்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் சோலார் பேனல் அமைக்க நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
மேலும் பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று முன்னாள் மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் ஒரே மாதிரி ஆடை அணிந்து பழைய நினைவுகளை நினைவூட்டும் விதமாக மைதானத்தில் பாண்டி ஆட்டம், கண்ணாமூச்சி ஆட்டம், நொண்டி ஆட்டம் விளையாடி மகிழ்ந்தனர்.