/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு: விவசாயிகள் பாதிப்புஅறுவடை இயந்திரம் வாடகை உயர்வு: விவசாயிகள் பாதிப்பு
அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு: விவசாயிகள் பாதிப்பு
அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு: விவசாயிகள் பாதிப்பு
அறுவடை இயந்திரம் வாடகை உயர்வு: விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜன 29, 2024 05:26 AM
சாயல்குடி: -நடப்பாண்டில் நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகை உயர்வால் விவசாயிகள் கூடுதல் நிதிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
கடலுார், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வருகை தருகின்றது.
கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது அறுவடை பணி நடக்கிறது.
ஏக்கருக்கு ரூ.4000 வரை செலவாகிறது. விவசாயிகள் கூடுதல் நிதி சுமையால் சிரமப்படுகின்றனர்.
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி கூறியதாவது:நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மணிக்கு ரூ.1800 வாங்குகின்றனர்கடந்த ஆண்டு ரூ.1600 இருந்தது.
ஏக்கருக்கு ரூ.4000 வரை செலவாகிறது. நெல் விற்பனையில் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே அறுவடை கூலியை உயர்த்தாமல் கடந்தாண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கடலாடி, சாயல்குடி பகுதிகளில் உரிய நேரத்தில் பருவமழை இல்லாததால் பாதிப்பை சந்தித்துள்ளோம்.
இயந்திர வாடகை உயர்வால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பது இல்லை என்றார்.