/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வண்ண சீருடையில் வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் வண்ண சீருடையில் வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்
வண்ண சீருடையில் வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்
வண்ண சீருடையில் வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்
வண்ண சீருடையில் வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 25, 2025 03:30 AM

திருவாடானை: திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் வண்ண சீருடையில் செல்கின்றனர்.
திருவாடானையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 100 ஆண்டுகளை கடந்துள்ள இப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு நுாற்றாண்டு விழா நடந்தது. இப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் அணிந்து வரும் வகையில் வண்ண சீருடை வழங்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், பள்ளியில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில் வண்ண சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து தலைமைஆசிரியர் கதிரவன் கூறியதாவது:
அரசு ஆண்டுதோறும் இலவச சீருடை வழங்குகிறது. இருந்த போதும் வாரத்தில் ஒரு நாள் வண்ண சீருடையில் மாணவர்கள் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 63 மாணவர்களுக்கு ரூ.31,500 செலவில் கரு நிற ஊதா, ஆரஞ்சு நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டது.
இச்சீருடைகளை வாரத்தில் ஒரு முறை புதன் கிழமை மட்டும் அணிந்து வருகின்றனர். மற்ற நாட்களில் அரசு வழங்கிய இலவச சீருடையில் பள்ளிக்கு வருகின்றனர் என்றார். நேற்று வண்ண சீருடையில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து உற்சாகத்துடன் பாடம் படித்தனர்.