/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோயில் ரோட்டில் கட்டுமான பொருள்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி ராமேஸ்வரம் கோயில் ரோட்டில் கட்டுமான பொருள்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி
ராமேஸ்வரம் கோயில் ரோட்டில் கட்டுமான பொருள்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி
ராமேஸ்வரம் கோயில் ரோட்டில் கட்டுமான பொருள்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி
ராமேஸ்வரம் கோயில் ரோட்டில் கட்டுமான பொருள்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி
ADDED : செப் 25, 2025 03:29 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் சாலையில் கட்டுமானப் பொருள்களை கொட்டி ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திட்டக்குடி, நடுத்தெரு வழியாக கோயில் பார்க்கிங் பகுதியில் நிறுத்துகின்றனர்.
இதனால் இந்த பிரதான சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும். இந்நிலையில் கோயில் மேற்கு கோபுரம் அருகே பிரதான சாலையில் செங்கல், கம்பி, மணலை கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை ஓரத்தில் சிரமத்துடன் நடந்து செல்லும் மக்கள் மீது வாகனங்கள் மோதி விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பிரதான இச்சாலையில் கட்டுமான பொருட்களை குவித்து, வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.