ADDED : டிச 01, 2025 07:06 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து அகஸ்தியர் கூட்டம் சென்ற அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்ட வசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து திருப்புல்லாணி வழியாக அகஸ்தியர்கூட்டம் கிராமத்திற்கு தினமும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அகஸ்தியர் கூட்டம் அருகே நேற்று செல்லும் போது பஸ் பிரேக் பிடிக்காமல் ரோட்டின் ஓரம் உள்ள குட்டையில் இறங்கியது.
அப்பகுதியில் கோயில் வரவேற்பு வளைவு இருந்ததால் நல்வாய்ப்பாக பஸ் கவிழவில்லை. பயணிகளும் காயம் ஏதுமின்றி தப்பினர். அரசு பஸ்கள் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படுவதால் அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


