/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தனுஷ்கோடியில் ராட்சத அலை: வீடுகளில் முடங்கிய மீனவர்கள் தனுஷ்கோடியில் ராட்சத அலை: வீடுகளில் முடங்கிய மீனவர்கள்
தனுஷ்கோடியில் ராட்சத அலை: வீடுகளில் முடங்கிய மீனவர்கள்
தனுஷ்கோடியில் ராட்சத அலை: வீடுகளில் முடங்கிய மீனவர்கள்
தனுஷ்கோடியில் ராட்சத அலை: வீடுகளில் முடங்கிய மீனவர்கள்
ADDED : ஜூன் 11, 2024 06:10 PM

ராமேஸ்வரம்: தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்., வரை வீசும். அதன்படி, சில நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் பருவக்காற்று தீவிரமடைந்து மணிக்கு 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் வீசுகிறது. தனுஷ்கோடி தென்கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு பல அடி துாரத்திற்கு ராட்சத அலைகள் எழுகின்றன.
இந்த அலைகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பாராங்கல் தடுப்பு சுவர் மீது ஆக்ரோஷமாக மோதி சாலையில் விழுகின்றன. அப்போது சாலையில் செல்லும் சுற்றுலா பயணியர் கடல் நீரில் நனைந்தபடி செல்கின்றனர். சூறாவளி காற்று காரணமாக ஜூன் 14 வரை மீன்பிடிக்க செல்ல மீன்துறை தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.