/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேவிபட்டினத்தில் உழவுப் பணி தீவிரம் தேவிபட்டினத்தில் உழவுப் பணி தீவிரம்
தேவிபட்டினத்தில் உழவுப் பணி தீவிரம்
தேவிபட்டினத்தில் உழவுப் பணி தீவிரம்
தேவிபட்டினத்தில் உழவுப் பணி தீவிரம்
ADDED : ஜூன் 10, 2024 11:25 PM

தேவிபட்டினம் : தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உழவுப் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கழனிக்குடி, நாரணமங்கலம், பொட்டகவயல், கருப்பூர், சம்பை, சிங்கனேந்தல், கோப்பேரிமடம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கோடை மழையால் விளை நிலங்கள் உழவு செய்வதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.
பெரும்பாலான விளை நிலங்கள் இப்பகுதியில் நெல் அறுவடைக்கு பின்பு உழவு செய்யப்படாத நிலையில் இருந்த நிலையில் தற்போது டிராக்டரில் விவசாயிகள் உழவுப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கோடை உழவால் மண்ணின் தன்மை உயர்ந்து, சாகுபடி பயிர்களுக்கு பலன் கொடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.