/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கட்டணமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை கட்டணமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை
கட்டணமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை
கட்டணமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை
கட்டணமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூன் 13, 2025 11:34 PM
சாயல்குடி: வணிகர் நல வாரிய உறுப்பினர்களா சேர்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என தெரிவிக்கப்பட்டது.சாயல்குடியைச் சேர்ந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எம்.பெத்தராஜ் கூறியதாவது:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது மாநில மாநாட்டில் தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கையான வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு குடும்ப இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கவும், அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து வணிகர் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத வணிகர்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்வதற்கான ஆண்டு விற்று -வரவு ரூ. 40 லட்சம் வரம்பில் உள்ள வணிகர்களும், வணிகர் நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள பதிவு கட்டணமான ரூ.500 நவ., மாதம் வரை அரசு விலக்கிக் கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வணிகர் நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாத வணிகர்கள் அனைவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டணம் இல்லாத உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவும், சம்பந்தப்பட்ட வணிகவரி அலுவலர்களோடு இணைந்து நலவாரிய உறுப்பினர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.