/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குழந்தை தொழிலாளர் முறைஅகற்ற விழிப்புணர்வு பிரசாரம் குழந்தை தொழிலாளர் முறைஅகற்ற விழிப்புணர்வு பிரசாரம்
குழந்தை தொழிலாளர் முறைஅகற்ற விழிப்புணர்வு பிரசாரம்
குழந்தை தொழிலாளர் முறைஅகற்ற விழிப்புணர்வு பிரசாரம்
குழந்தை தொழிலாளர் முறைஅகற்ற விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூன் 13, 2025 11:34 PM

ராமநாதபுரம்: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம் செய்தனர். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கையெழுத்து இயக்க விழிப்புணர்வு வாகனம் சென்றது. ராமநாதபுரம் தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குநர் குணசேகரன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.