/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கண்டுணர்வு பயணத்திட்டத்தில் ஈரோடு சென்ற விவசாயிகள் கண்டுணர்வு பயணத்திட்டத்தில் ஈரோடு சென்ற விவசாயிகள்
கண்டுணர்வு பயணத்திட்டத்தில் ஈரோடு சென்ற விவசாயிகள்
கண்டுணர்வு பயணத்திட்டத்தில் ஈரோடு சென்ற விவசாயிகள்
கண்டுணர்வு பயணத்திட்டத்தில் ஈரோடு சென்ற விவசாயிகள்
ADDED : ஜூன் 15, 2025 11:00 PM
ராமநாதபுரம்; உச்சிப்புளியை சேர்ந்த 50 முன்னோடி விவசாயிகள் கண்டுணர்வு பயணத்திட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வேளாண்கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
அப்போது வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பட்டு வளர்ச்சி, டான்சிடா, விதைச்சான்றளிப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகள் சார்பில்அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.மேலும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், சிறுதானிய இயக்கம், பாரம்பரிய நெல் வகைகள், எண்ணெய் வித்து இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் அறிவியல் நிலையம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தனியார் விதைகள், உரங்கள், ட்ரோன்நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை நேரில் கண்டு புதியதொழில்நுட்பங்களை அறிந்து கொண்டனர்.
விஞ்ஞானிகளிடம் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள்கேட்டறிந்தனர்.
கண்டுணர்வு பயணத்திற்கான ஏற்பாடுகளை உச்சிபுளி அட்மா திட்ட வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் செய்திருந்தார்.