/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பருத்திப் பஞ்சுக்கு எதிர்பார்த்த லாபமின்றி விவசாயிகள் வேதனை! விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கைபருத்திப் பஞ்சுக்கு எதிர்பார்த்த லாபமின்றி விவசாயிகள் வேதனை! விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கை
பருத்திப் பஞ்சுக்கு எதிர்பார்த்த லாபமின்றி விவசாயிகள் வேதனை! விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கை
பருத்திப் பஞ்சுக்கு எதிர்பார்த்த லாபமின்றி விவசாயிகள் வேதனை! விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கை
பருத்திப் பஞ்சுக்கு எதிர்பார்த்த லாபமின்றி விவசாயிகள் வேதனை! விலையை அரசு நிர்ணயிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 01:59 AM
உத்தரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி விளைந்தபோதும் அதற்குரிய விலை கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் வரை செலவழித்தும் லாபம் இன்றி இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பரமக்குடி, முதுகுளத்துார், கடலாடி, நயினார்கோவில் மற்றும் உத்தரகோசமங்கை, களரி, கீழச்சீத்தை, மேலச்சீத்தை, இடம் பாடல், பனையடியேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடையில் ஏராளமானோர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
தற்பொழுது பருத்தி விளைச்சலுக்கு வந்துள்ள நிலையில் அவற்றினை முறையாக பறித்து சேகரித்து ஓரிடத்தில் குவித்து வைத்து விவசாயிகள் பருத்தியில் இருந்து பஞ்சை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகோசமங்கையை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது; ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி செய்துள்ளோம். சமீபத்தில் பெய்த கோடை மழையும், கண்மாய் நீரும் பருத்தி விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. தற்பொழுது பருத்தி பல இடங்களில் விளைந்துள்ளது.
இந்நிலையில் பருத்திக்கு உரிய விலை இல்லாமல் கிலோ ரூ.45க்கு வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் மொத்தமாக விலைக்கு வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டு பருத்தி ரூ.65 முதல் ரூ.75 வரை விற்றது.
நடப்பாண்டில் ரூ.45க்கு குறைவாக விற்பதால் எதிர்பார்த்த லாபமின்றி சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே பருத்திக்கு உரிய விலையை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் அதிகப்படியான மகசூலுக்கும் உரிய ஆலோசனைகளை வேளாண்மை துறையினர் வழங்க வேண்டும் என்றனர்.