Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அம்ரித் திட்டத்தில் நவீனமயமாகும் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்; விரைவுபடுத்த பயணிகள் கோரிக்கை

அம்ரித் திட்டத்தில் நவீனமயமாகும் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்; விரைவுபடுத்த பயணிகள் கோரிக்கை

அம்ரித் திட்டத்தில் நவீனமயமாகும் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்; விரைவுபடுத்த பயணிகள் கோரிக்கை

அம்ரித் திட்டத்தில் நவீனமயமாகும் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்; விரைவுபடுத்த பயணிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 24, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
பரமக்குடி : -மதுரை கோட்டத்தில் உள்ள பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் நவீனமயமாக்கப்படும் சூழலில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை- ராமேஸ்வரம் ரயில் மார்க்கத்தில் பரமக்குடி அதிகமான லாபம் ஈட்டித்தரும் ஸ்டேஷனாக உள்ளது. இங்கிருந்து பயணிகள் ரயில்கள்களில் தினசரி பணிக்கு செல்லும் நுாற்றுக்கணக்கானோர் சீசன் டிக்கெட்டுகளை வாங்கி உள்ளனர்.

மேலும் அனைத்து வகையான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் செல்ல ஏராளமானோர் பரமக்குடியில் இருந்து முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் 'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தில் மதுரை கோட்டத்தில் பரமக்குடி ஸ்டேஷன் தேர்வாகியது.

இதன்படி பயணிகளை வரவேற்கும் வகையில் பிரம்மாண்டமான ஆர்ச், காத்திருப்பு கூடங்கள், நவீன கழிப்பறைகள், லிப்ட் வசதி, இலவச இணையதள வசதி, ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யும் கூடம், வாகனங்களை நிறுத்த வசதிகள் என ஒட்டு மொத்தமாக நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பணிகள் துவங்கி பல மாதங்கள் ஆகும் சூழலில் விரைவு படுத்தாமல் உள்ளனர்.

இதனால் ஒவ்வொரு முறை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் போதும் பயணிகள் தடுமாறும் நிலை உள்ளது.

ஆகவே ரயில்வே கோட்ட அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்துவதுடன், குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவையான வசதிகளையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us