/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ யாத்ரீகர்களுக்கு கால்நடைகளால் ஆபத்து கண்டுகொள்ளாத ஏர்வாடி ஊராட்சி யாத்ரீகர்களுக்கு கால்நடைகளால் ஆபத்து கண்டுகொள்ளாத ஏர்வாடி ஊராட்சி
யாத்ரீகர்களுக்கு கால்நடைகளால் ஆபத்து கண்டுகொள்ளாத ஏர்வாடி ஊராட்சி
யாத்ரீகர்களுக்கு கால்நடைகளால் ஆபத்து கண்டுகொள்ளாத ஏர்வாடி ஊராட்சி
யாத்ரீகர்களுக்கு கால்நடைகளால் ஆபத்து கண்டுகொள்ளாத ஏர்வாடி ஊராட்சி
ADDED : மே 30, 2025 11:47 PM
கீழக்கரை:ஏர்வாடி தர்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு கால்நடைகள் யாத்ரீகர்களுக்கு இடையூறாக தொல்லை தரும் வகையில் திரிகின்றன.
ஏர்வாடி தர்காவிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் வருகின்றனர். இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் தெருக்கள், சாலைகளில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் கூட்டமாக இடையூறு ஏற்படுத்துகின்றன.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், தர்காவிற்கு வரக்கூடிய யாத்ரீகர்களுக்கு தொல்லை தரும் வகையில் மாடுகள் முட்டுகின்றன. இதனால் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டியது உள்ளது. ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தினர் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கையும், அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.