/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சீருடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்சீருடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
சீருடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
சீருடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
சீருடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:42 AM

திருப்புல்லாணி, : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரே போல் வேட்டி சட்டை அணிந்து சமத்துவ பொங்கல் விழா நேற்று மதியம் கொண்டாடப்பட்டது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் யூனியன் அலுவலர்கள், பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை போல வேட்டி மற்றும் சட்டை அணிந்து பொங்கல்விழா கொண்டாடினார். யூனியன் தலைவர் புல்லாணி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ராஜேஸ்வரி வரவேற்றார்.
கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், உதவி பொறியாளர் அருண்பிரசாத், அலுவலக மேலாளர்கள் திருமுருகன், லதா, துணை பி.டி.ஓக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.