/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் உயிர் காக்கும் ரத்த வங்கியில் பணியாளர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு ராமநாதபுரத்தில் உயிர் காக்கும் ரத்த வங்கியில் பணியாளர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ராமநாதபுரத்தில் உயிர் காக்கும் ரத்த வங்கியில் பணியாளர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ராமநாதபுரத்தில் உயிர் காக்கும் ரத்த வங்கியில் பணியாளர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ராமநாதபுரத்தில் உயிர் காக்கும் ரத்த வங்கியில் பணியாளர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ADDED : ஜூன் 01, 2024 04:19 AM

உயிர் காக்கும் பணியில்ரத்த வங்கியின் பணி முக்கியமானது. இங்கு சேமிக்கப்படும் ரத்தமானது நோயாளிகளுக்கு தேவைப்படும் போது இலவசமாக வழங்கப்படுகிறது. பதிலுக்கு அடுத்தவருக்கு வழங்க ரத்தம் கொடுத்தால் போதுமானது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி பழைய மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு இருந்த கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டடத்தில் இடம் இருந்தும் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. பழைய கட்டடத்தில் ரத்த வங்கியில் ரத்தம் எடுக்கும் அறையில் குளிர் சாதன வசதி செயல்படவில்லை.
ரத்தம் கொடுக்க வருபவர்கள் காத்திருக்கும் பகுதியில் அமர்வதற்கு சேர்கள் இல்லை. மின்விசிறியும் இல்லை. மேலும் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஒரு நர்ஸ் மட்டுமே பணியில் உள்ளார். ஒரே நேரத்தில் பலர் ரத்த தானம் செய்ய வந்தால் ரத்தம் சேமிக்க சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணமாக ரத்தம் சேமிப்பு பணிகள் பாதிக்கப்படுகிறது.
ரத்த தானம் செய்வோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முடிவதில்லை. அவர்களுக்கான வசதிகளை செய்ய முடியவில்லை. முன்பு ரத்த தான முகாம்கள் அதிகம் நடத்தி நன்கொடை வழங்குவார்கள். தற்போது ரத்த தான முகாம்கள் குறைந்துவிட்டன.
அதே நேரம் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 முதல் 30 யூனிட்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருக்கும் லேபர் வார்டு, அவசர சிகிச்சை வார்டு, பிரசவ வார்டு என அனைத்து பகுதிக்கும் தேவைப்படுகிறது.
ரத்த தான ஒருங்கிணைப்பாளர் பாதுஷா நுாருல் சமது கூறுகையில், ரத்த வங்கி பகுதியில் ரத்ததானம் செய்ய வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ரத்த தானத்திற்குஒரே நேரத்தில் அதிகமானோர் வந்தால் ரத்தம் சேகரிக்க போதுமான பணியாளர்கள் இல்லை.
ரத்த தானம் செய்ய வருபவர்கள் காத்திருப்பு அறையில் அமர்வதற்கு எந்த வசதியும் இல்லை. இது குறித்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்தம் தானம் செய்ய வருபவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் முன் வர வேண்டும்.