Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மனித சங்கிலி விழிப்புணர்வு

மனித சங்கிலி விழிப்புணர்வு

மனித சங்கிலி விழிப்புணர்வு

மனித சங்கிலி விழிப்புணர்வு

ADDED : ஜூன் 01, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மனித சங்கிலி வடிவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பிரசாரம் நடந்தது.

கலெக்டர் அலுவலகபஸ் ஸ்டாப் அருகே நடந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை ராமநாதபுரம் வனச்சரகர் திவ்யலெட்சுமி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் அனந்த நாராயணன், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்றார்.

ஆண்டுதோறும் ஒரு மையக்கருத்தை தேர்வு செய்து உலக சுற்றுச்சூழல் தினம் நடக்கிறது. இவ்வாண்டின் மையக்கருத்தாக நில மறு சீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தாங்கு திறன் என்ற தலைப்பில் ஜூன் 5ல் உலகச்சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலங்கள், மனித சங்கிலி, கருத்து பட்டறைகள், மரங்கள் வளர்த்தல், கடற்கரைகளில் துாய்மைப் பணி செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதன்படி முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி பயிற்சி ஆசிரியர்களால் மனித சங்கிலி நடந்தது. அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்தனர்.

பரமக்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், கல்லுாரி பேராசிரியர்கள், மாவட்ட தேசிய பசுமைப்படை அமைவுப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us