/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் இன்று முதல் துவக்கம் ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் இன்று முதல் துவக்கம்
ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் இன்று முதல் துவக்கம்
ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் இன்று முதல் துவக்கம்
ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் இன்று முதல் துவக்கம்
ADDED : செப் 16, 2025 12:18 AM
ராமேஸ்வரம்; இன்று முதல் (செப்., 16) ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் போக்குவரத்து துவக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு செப்., 13ல் சோதனை ஓட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரும் பயணிகள் ரயில், கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், ஓகா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின் இன்ஜினில் இயங்கும். செப்., 18ல் ராமேஸ்வரம் - திருப்பதி ரயிலும், செப்., 21 முதல் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மின் இன்ஜினில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.