/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கிழக்குகடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளால்.. ரோட்டை காணோமுங்க: ராமேஸ்வரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்துகிழக்குகடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளால்.. ரோட்டை காணோமுங்க: ராமேஸ்வரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
கிழக்குகடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளால்.. ரோட்டை காணோமுங்க: ராமேஸ்வரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
கிழக்குகடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளால்.. ரோட்டை காணோமுங்க: ராமேஸ்வரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
கிழக்குகடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளால்.. ரோட்டை காணோமுங்க: ராமேஸ்வரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : ஜூலை 07, 2024 02:02 AM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் உள்ளிட்ட புனித ஆன்மிக தலங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை ராமேஸ்வரம் மற்றும் துாத்துக்குடி ரோடு, கீழக்கரை, திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ரோடுகள் குறுகியதாகவும் இவ்விடங்கள் சந்திப்புகள், கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் 19 இடங்கள் கரும்புள்ளி இடங்களாக நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளனர்.
குறிப்பாக பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்லும் பிரதான ரோட்டின் இருபுறங்களிலும் நடை பாதையை ஆக்கிரமித்து புதிதாக நாளுக்கு நாள் தரைக்கடை, தள்ளு வண்டிகள், கூடாரக் கடைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே ராமேஸ்வரம் ரோடு குறுகியதாக உள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது. குறிப்பாக அமாவாசை, அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான வாகனங்களில் வெளியூர் பயணிகள் சென்று வருகின்றனர்.
எனவே விபத்திற்கு முன்பாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.