/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராணி மங்கம்மாள் ரோட்டில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு ராணி மங்கம்மாள் ரோட்டில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ராணி மங்கம்மாள் ரோட்டில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ராணி மங்கம்மாள் ரோட்டில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ராணி மங்கம்மாள் ரோட்டில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 07, 2024 02:03 AM

தேவிபட்டினம்: தேவிபட்டினம் முடிவீரன்பட்டினம் முதல் ஆற்றங்கரை வரை உள்ள ரோடு ராணி மங்கம்மாள் ரோடு என அழைக்கப்படுகிறது.
இந்த ரோட்டை அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் இந்த ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக மண் அள்ளும் இயந்திரத்தில் ரோட்டோரம் மண் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது.
அதன் பின் ரோட்டில் கொட்டப்பட்ட மண் முறையாக அகற்றப்படாததால் ரோட்டில் பாதி அளவிற்கு மண் பரவி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்போகி, புதுவலசை, தாவுக்காடு, பனைக்குளம், சோகையன்தோப்பு உள்ளிட்ட பகுதி ரோடுகளில் அதிகளவில் மணல் குவியல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தினர்.