/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 11, 2025 10:49 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்கம் மற்றும் உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிக் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான் பொன்னையா வரவேற்றார். திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் மாணவர்களின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரோட்டரி துணை கவர்னர் பரசுராமன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, பொருளாளர் தியாகு, பள்ளி முதல்வர் சங்கீதா, டாக்டர்கள் ராஜா முகமது, ராமநாதன், முன்னாள் தலைவர்கள் கந்தசாமி, சுப்பிரமணியன், கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.