ADDED : ஜன 11, 2024 04:56 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராஜூ தலைமை வகித்தார். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் மவுசூரியா மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.