/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவுபரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
ADDED : ஜன 30, 2024 11:13 PM
பரமக்குடி : -பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முன் மொழியப்பட்டுள்ளது.
பரமக்குடி, எமனேஸ்வரம் ஆகிய இரு பகுதிகளை இணைத்து 1964ல் நகராட்சி உருவாக்கப்பட்டது. 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 95 ஆயிரத்து 579 பேர் வசிக்கின்றனர். தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் மக்கள் உள்ளனர்.
நகராட்சி 16 சதுர கி.மீ., ல் உள்ளது. 36 வார்டுகளில் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் உள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் செல்லும் வழியில் முக்கிய வழித்தடமாக உள்ளது.
காந்தியடிகள், வீரத்துறவி விவேகானந்தர் உள்ளிட்டோர் கால் பதித்த இடம்.
இங்கு கைத்தறி பட்டு நெசவு பிரதான தொழிலாக உள்ளதுடன், குண்டு மிளகாய் விளைச்சலுக்கு சிறப்பு பெற்றது. தொடர்ந்து நகராட்சியை தரம் உயர்த்தும் நோக்கில் சிறப்பு நிலை நகராட்சியாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஜன. 20ல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தெளிச்சாத்த நல்லுார் ஊராட்சி 1 முதல் 9 வார்டுகள் வரையும், எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் வார்டு 1, வேந்தோணி ஊராட்சியில் வார்டு 1 முதல் 5 மற்றும் 8வது வார்டு, உரப்புளி ஊராட்சியில் 1 முதல் 4 வார்டுகள் என நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மக்கள் தொகை மற்றும் எல்லையை கணக்கில் கொண்டு பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
தொடர்ந்து நகராட்சி பகுதி எல்லை விரிவடைவதுடன் நிர்வாகம் மற்றும் வசதிகளை மேம்படுத்த ஏதுவாக இருக்கும்.