Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் குடிநீர் தொட்டி சேதம்: அச்சத்தில் பொதுமக்கள்

ராமேஸ்வரத்தில் குடிநீர் தொட்டி சேதம்: அச்சத்தில் பொதுமக்கள்

ராமேஸ்வரத்தில் குடிநீர் தொட்டி சேதம்: அச்சத்தில் பொதுமக்கள்

ராமேஸ்வரத்தில் குடிநீர் தொட்டி சேதம்: அச்சத்தில் பொதுமக்கள்

ADDED : செப் 13, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்து கூரை பெயர்ந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோயில் எதிரே ஒரு லட்சம் லி., கொள்ளளவு கொண்ட நகராட்சியின் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இங்கிருந்து முஸ்லிம் தெரு, மார்க்கெட் தெரு, மேட்டு தெரு, புதுத் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் உள்ள நகராட்சி குழாயில் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த தொட்டியை 4 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சீரமைத்த நிலையில் மீண்டும் சிமென்ட் கலவைகள் அரிக்கப்பட்டு குடிநீர் தொட்டி சுற்றி நீர் கசிந்து பாசி படர்ந்துள்ளது.

மொத்தத்தில் குடிநீர் தொட்டி பலமிழந்து சேதமடைந்துள்ளதால் எப்போது கூரை இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த தொட்டி மூலம் மக்களுக்கு விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு தொட்டியை தரமுடன் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us