Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

ADDED : செப் 13, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
குண்டும் குழியுமான ரோடு

ராமநாதபுரம் குண்டுக்கரை காந்தாரியம்மன் கோயில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக கோயிலுக்கு சென்று வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாரியம்மாள், ராமநாதபுரம்.

குளமாகும் ரோடு

ராமநாதபுரம் - மதுரை ரோடு சர்ச் பஸ் ஸ்டாப் அருகே மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் தேங்குவதால் நடந்து செல்ல வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். தடையின்றி தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணாயிரம், பேராவூர்.

சுற்றுச்சூழல் கேடு

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கீழக்கரை செல்லும் மெயின் ரோட்டில் குப்பை கொட்டி எரிப்பதால் புகை பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து எரிப்பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இஸ்மாயில், கீழக்கரை.

தெருநாய்கள் தொல்லை

பட்டணம்காத்தான் மகாத்மாகாந்தி நகர் மெயின் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை பிடித்து தடுப்பூசி போட வேண்டும். நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

- நந்தினி, பட்டணம்காத்தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us