/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் விரிசல் பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் விரிசல்
பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் விரிசல்
பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் விரிசல்
பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் விரிசல்
ADDED : ஜூன் 15, 2025 11:36 PM
ஆர்.எஸ்.மங்கலம்,:ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் உயர்மட்ட பாலத்தின் பில்லர், துாண்களில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இவற்றால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் குறுக்கே, சிவகங்கை மாவட்ட கிராம பகுதிகளை இணைக்கும் வகையில், உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மூலம், தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் பில்லர் துாண்கள், பக்கவாட்டு சுவர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆலமர, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன.
இந்த மரக்கன்றுகளின் வேர்களால் பாலத்தின் பில்லர் துாண்களில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது.
பாலத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகள் குறித்து புகார் எழும்போது, முழுமையாக மரக்கன்றுகளை அகற்றாமல், பெயரளவில் மட்டுமே நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றிச் செல்வதால், தொடர்ந்து மரக்கன்றுகள் வளர்வது தொடர் கதையாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.