ADDED : ஜூன் 15, 2025 11:36 PM
முதுகுளத்துார்:முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா அறக்கட்டளை சார்பில் ஆனி மாத சிறப்புபூஜை நடந்தது.
குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணை குருநாதர் புயல்நாதன், முன்னிலை வகித்தார்.
கணபதி ஹோமம் பூர்ணாஹூதி, யாகசால பூஜைகள் நடந்தது. படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று முதுகுளத்துார், கமுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆனி மாதம் சிறப்புபூஜை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.