/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 23, 2025 04:05 AM
கமுதி : கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சார்பில் புவி நேரம் மற்றும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரியின் தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ.,மலைராஜ் முன்னிலை வகித்தனர்.
பேரையூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கி பஜார், போலீஸ் ஸ்டேஷன் உட்பட முக்கிய வீதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
பின் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்து முதல்வர் திருவேணி விளக்கிப் பேசினார்.
உடன் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், உதவி பேராசிரியர்கள் மோனிகா, நிவாஸ் உட்பட மாணவர்கள், போலீசார் இருந்தனர்.