/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரையில் 2 மாதங்களாக வீணாகும் காவிரி குடிநீர்கீழக்கரையில் 2 மாதங்களாக வீணாகும் காவிரி குடிநீர்
கீழக்கரையில் 2 மாதங்களாக வீணாகும் காவிரி குடிநீர்
கீழக்கரையில் 2 மாதங்களாக வீணாகும் காவிரி குடிநீர்
கீழக்கரையில் 2 மாதங்களாக வீணாகும் காவிரி குடிநீர்
ADDED : ஜூன் 24, 2024 01:59 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி 4வது வார்டில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி நீர் உடைப்படுத்து வீணாகி தெருவில் ஓடுகிறது.
அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.ஆர். சுரேஷ் கூறியதாவது; 4வது வார்டில் வாரத்திற்கு நான்கு முறை வீடுகளில் காவிரி குடிநீர் இணைப்பு மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வீடுகளுக்கு வரக்கூடிய பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரும் நேரங்களில் வெளியேறி தெருக்களில் வீணாகி வருகிறது.இது குறித்து கீழக்கரை நகராட்சியில் முறையிட்டுள்ளேன். இதுவரை பழுது நீக்கி தரவில்லை. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்வர வேண்டும் என்றார்.