ADDED : செப் 13, 2025 03:51 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொக்கானாரேந்தல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஒவ்வொரு முகாமிலும் 13 அரசுத் துறைகளின் மூலம் 43 சேவைகள் வழங்கிடும் விதமாக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைகின்றனர். முகாமை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் வள்ளலார், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தனர்.
அப்போது மக்கள் மனுக்கள் வழங்குவது தொடர்பாகவும், மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். பெறப்படும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் பரிசீலனை செய்து அரசின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
பின் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜா, தாசில்தார் கோகுல்நாத், பி.டி.ஓ.,க்கள் ஜானகி, பாலதண்டாயுதம் உட்பட அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.