Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் நகராட்சியில் 30 கடைகள் ஏலம் இழுத்தடிப்பு: கவுன்சிலருக்கு ஒதுக்க திட்டமா

ராமேஸ்வரம் நகராட்சியில் 30 கடைகள் ஏலம் இழுத்தடிப்பு: கவுன்சிலருக்கு ஒதுக்க திட்டமா

ராமேஸ்வரம் நகராட்சியில் 30 கடைகள் ஏலம் இழுத்தடிப்பு: கவுன்சிலருக்கு ஒதுக்க திட்டமா

ராமேஸ்வரம் நகராட்சியில் 30 கடைகள் ஏலம் இழுத்தடிப்பு: கவுன்சிலருக்கு ஒதுக்க திட்டமா

ADDED : செப் 09, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் நகராட்சி கட்டிய 30 புதிய வணிக கடைகள் ஏலம் விடாமல் இழுத்தடிப்பதால் கவுன்சிலர்களுக்கு ஒதுக்க திட்டமிடுவதாக மக்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.1.66 கோடி செலவில் நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் 30 புதிய வணிக கடைகளை கட்டியது.

இதனை அமைத்து 5 மாதங்கள் ஆகிய நிலையில் நகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தில் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடியே கிடக்கிறது.

இதனால் கடை ஷட்டர் சேதமடைந்தும், இரவில் கடைகள் முன்பு குடிமகன்கள் அமர்ந்து பார் ஆக மாற்றி, மதுபாட்டிலை உடைத்து வீசுகின்றனர்.

இச்சூ ழலில் புதிய கடைகளை பகிரங்க ஏலத்தில் விட்டு நியாயமான வாடகைக்கு வியாபாரிகளிடம் வழங்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

இச்சூழலில் சிண்டிகேட் குழு அமைத்து பெயரளவுக்கு ஏலம் விட்டு நகராட்சி கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டும் நபர் களுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிடுவதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மேலும் ராமநாதபுரம் நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலத்தில் ஏற்பட்ட சர்ச்சையை தவிர்க்க ராமேஸ்வரம் நகராட்சியின் புதிய கடைகள் ஏலம் குறித்து பிரபலமான பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு நகராட்சி வளாகத்தில் பகிரங்க ஏலம் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் குமரன் கூறுகையில், புதிய வணிக கடைகளுக்கு வாடகை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு நடக்கிறது.

விரைவில் பொது ஏலம் நடத்தி கடைகள் வழங்கப்படும். ஏலம் விடுவதில் எந்த தவறும் நடக்காது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us