ADDED : ஜன 30, 2024 11:55 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடத்திய பெண் உட்பட இருவரை போலீசார்கைது செய்தனர்.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக பஜார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்.
வீட்டிற்குள் அடிக்கடி பலர் சென்று வந்தனர்.
இதையடுத்து போலீசார்சோதனை நடத்தினர். அங்கிருந்த 35 வயது பெண், 50 வயது ஆண் ஆகிய இருவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.
விசாரணையில் இளம்பெண் சின்ன ஏர்வாடிகீழக்கரை கோகுல்நகரை சேர்ந்தவர் என்பதும், வறுமையால் விபச்சாரத்திற்கு வந்ததும் தெரிய வந்தது.
இவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியரெஜினா 65, விபச்சாரத்திற்காக வந்த ராமநாதபுரம்அண்ணாநகர் பாக்கியம் 50, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.-----