/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவராக ஆடலரசன் தேர்வுஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவராக ஆடலரசன் தேர்வு
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவராக ஆடலரசன் தேர்வு
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவராக ஆடலரசன் தேர்வு
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவராக ஆடலரசன் தேர்வு
ADDED : பிப் 25, 2024 12:54 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி தேர்தலில் தென் தமிழக தலைவராக ஆ.ஆடலரசன் 65, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சட்ட விதிமுறைகளின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு நடக்கும். அதன்படி நேற்று ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் காலாண்டு சிறப்பு கூட்டம் நடந்தது.
இங்கு நடந்த தென் தமிழக மாநிலத் தலைவர் தேர்தலுக்கு ஆர்.எஸ்.எஸ்., மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணா முத்துசாமி தேர்தல் அதிகாரியாக இருந்தார்.
இதில் தற்போது தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருக்கும் ஆடலரசன் மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த பதவியை 3 ஆண்டுகள் வகிப்பார். 2-வது முறையாக மீண்டும் ஆடலரசன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன் வட தமிழக தலைவராக சேலத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.