ADDED : ஜூன் 30, 2025 05:59 AM
கீழக்கரை : ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் நேற்று நடிகர் சசிகுமார் பிரார்த்தனை செய்தார்.
அவர் நடிக்கும் 'வதந்தி 2' வெப் சீரியல் சாயல்குடி, உத்தரகோசமங்கை சுற்றுவட்டார பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக படபிடிப்பு நடக்கிறது. இதற்கிடையில் ஏர்வாடி தர்காவில் சசிகுமார் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.