/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புது பஸ் ஸ்டாண்ட் அருகே காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி புது பஸ் ஸ்டாண்ட் அருகே காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி
புது பஸ் ஸ்டாண்ட் அருகே காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி
புது பஸ் ஸ்டாண்ட் அருகே காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி
புது பஸ் ஸ்டாண்ட் அருகே காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி
ADDED : மே 21, 2025 11:57 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ்கள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பயன்பாடில்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டிற்குள் விரிவாக்கப் பணிகள் நடக்கிறது.
இதையடுத்து அனைத்து பஸ்களும் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., சிலை அருகே நின்று செல்கின்றன. இங்கு வரும் பயணிகள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர்தொட்டி வைத்துள்ளனர்.
தற்போது பராமரிப்பு இல்லாமல் திருகு குழாய் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது.
கோடை காலம் என்பதால் பயணிகள் நலன் கருதி குடிநீர்தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.