/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/திருவாடானையில் 80 வீடுகள் சேதம்: ரூ.4.35 லட்சம் நிவாரணம்திருவாடானையில் 80 வீடுகள் சேதம்: ரூ.4.35 லட்சம் நிவாரணம்
திருவாடானையில் 80 வீடுகள் சேதம்: ரூ.4.35 லட்சம் நிவாரணம்
திருவாடானையில் 80 வீடுகள் சேதம்: ரூ.4.35 லட்சம் நிவாரணம்
திருவாடானையில் 80 வீடுகள் சேதம்: ரூ.4.35 லட்சம் நிவாரணம்
ADDED : ஜன 13, 2024 04:27 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் பருவ மழையால் சேதமடைந்த 80 வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் கூறியதாவது:
வட கிழக்கு பருவமழையால் திருவாடானை தாலுகாவில் 80 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது. மேலும் இத்தாலுகாவில் 36,616 பேருக்கு பொங்கல்தொகுப்பு வழங்கும் பணிகள் நடக்கிறது.
நேற்று வரை 70 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு விட்டது. பொங்கலுக்குள் அனைவருக்கும் வழங்கபடும். அதே போல் இலவச வேட்டி, சேலையும் பொங்கலுக்குள் வழங்கப்படும். நேற்று முன்தினம் தொண்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
அதில் பொதுமக்களிடமிருந்து 512 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.