Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ காலேஜெல்லாம் கஷ்டம் என்கிறார் பொன்முடி

காலேஜெல்லாம் கஷ்டம் என்கிறார் பொன்முடி

காலேஜெல்லாம் கஷ்டம் என்கிறார் பொன்முடி

காலேஜெல்லாம் கஷ்டம் என்கிறார் பொன்முடி

ADDED : ஜூன் 25, 2024 12:02 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: அரசு கல்லுாரிகள் அமைக்க தேவைப்படும் நிலம், செலவு குறித்த விபரங்களை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டசபையில் விவரித்தார்.

சட்டசபையில் அவரது பதிலுரை:

புதுமைப்பெண் திட்டம் வாயிலாக, உயர்கல்வியில் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, சென்னை மாநில கல்லுாரியில், கடந்தாண்டு, 37 சதவீதமாக இருந்த மாணவியர் சேர்க்கை, நடப்பாண்டு, 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநிலத்தில், அரசு, அரசு உதவி, சுயநிதி என, 1,626 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 3.64 லட்சம் பேர் படிக்கின்றனர். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் தொகுதிக்கு அரசு கல்லுாரி வேண்டும் என்று கேட்கின்றனர்.

ஒரு கல்லுாரி அமைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு மாநகராட்சி பகுதியாக இருந்தால், 2 ஏக்கர்; நகர பகுதியாக இருந்தால், 3 ஏக்கர்; கிராமப்புறமாக இருந்தால், 5 ஏக்கர் நிலம் தேவை.

அதுமட்டுமின்றி, கட்டடம் கட்ட, 20 கோடி ரூபாயை அரசு ஒதுக்க வேண்டும். ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்குவதற்கு, தொடர் செலவினமாக ஆண்டுக்கு, 3.50 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

அதையெல்லாம் கணக்கில் வைத்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எந்த தொகுதியில் அரசு கல்லுாரி இல்லையோ; அந்த தொகுதியில், கல்லுாரி அமைக்கலாம் என, முதல்வர் கூறியுள்ளார். எனவே, எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிதிநிலைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.

சுயநிதி கல்லுாரிகள் அமைக்க நிலம் மட்டுமின்றி, 25 கோடி ரூபாயை அரசிடம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us