Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பார்த்திபனுார் மதகு அணையில் 3500 கன அடி நீர் வெளியேற்றம்

பார்த்திபனுார் மதகு அணையில் 3500 கன அடி நீர் வெளியேற்றம்

பார்த்திபனுார் மதகு அணையில் 3500 கன அடி நீர் வெளியேற்றம்

பார்த்திபனுார் மதகு அணையில் 3500 கன அடி நீர் வெளியேற்றம்

ADDED : ஜன 11, 2024 04:18 AM


Google News
பரமக்குடி : வைகை அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் பார்த்திபனுார் மதகு அணையை வந்தடைந்த நிலையில் 3500 கன அடி வரை வெளியேற்றப்பட்டு வருவதாக பரமக்குடி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடி உயர்ந்ததை அடுத்து உபரி நீர் டிச.8ல் அணையிலிருந்து திறக்கப்பட்டது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் பகுதியில் அமைந்துள்ள மதகு அணைக்கு நேற்று காலை 5:00 மணிக்கு தண்ணீர் வந்தடைந்தது. தொடர்ந்து வலது, இடது பிரதான கால்வாய்களில் தலா 1000 கன அடியும், வெள்ள போக்கி கால்வாய் வழியாக 700 கன அடியும், வைகை ஆற்றில் மீதமுள்ள தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று பரமக்குடியை கடந்து செல்லும் தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடையும்.

கால்வாய்களில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் சென்று வரும் நிலையில் அனைத்து கண்மாய்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us