/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முன்கூட்டியே வருமான வரி செலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் இணை ஆணையர் தகவல் முன்கூட்டியே வருமான வரி செலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் இணை ஆணையர் தகவல்
முன்கூட்டியே வருமான வரி செலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் இணை ஆணையர் தகவல்
முன்கூட்டியே வருமான வரி செலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் இணை ஆணையர் தகவல்
முன்கூட்டியே வருமான வரி செலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் இணை ஆணையர் தகவல்
ADDED : ஜூன் 13, 2024 05:31 AM

ராமநாதபுரம்: கடைசிநேரத்தில் வருமானவரியை அவசரமாகசெலுத்துவதை விட முன் கூட்டியே நான்கு தவனைகளாகசெலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் என மதுரை வருமானவரித்துறை இணைஆணையர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ளவருமானவரித்துறை அலுவலகத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை மண்டல இணை ஆணையர்ஸ்ரீதேவி தலைமை வகித்தார். ராமநாதபுரம் வருமான அதிகாரி சந்திரசேகர், வருமானவரி ஆலோசகர் ஆடிட்டர் திருப்பதி,ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.
வருமானவரி இணை ஆணையர் ஸ்ரீதேவி பேசியதாவது: இந்தியாவில் வருமானவரி செலுத்துவர் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு அனைவரும் வருமானவரி செலுத்த வேண்டும். வரிசெலுத்துவது, குறைகளை தெரிவிக்க அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை, ஆன்-லைனில் புகார் தெரிவிக்கலாம்.
சம்பந்த அதிகாரிகள் மூலம் 30நாட்களில் தீர்வு காணப்படும்.ஆண்டுக்கு 4 தவனைகளாக முன்கூட்டியே வரியை செலுத்தினால் வணிகர்கள் அபராத வட்டியை தவிர்க்கலாம் என்றார். இக்கூட்டத்தில் வணிகர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.