/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பராமரிக்கப்படுமா *கோடை வெப்பத்தால் வாடி கருகும் குறுங்காடுகள் *அரசு நிதியை வீணாவதை தடுப்பார்களா அதிகாரிகள் பராமரிக்கப்படுமா *கோடை வெப்பத்தால் வாடி கருகும் குறுங்காடுகள் *அரசு நிதியை வீணாவதை தடுப்பார்களா அதிகாரிகள்
பராமரிக்கப்படுமா *கோடை வெப்பத்தால் வாடி கருகும் குறுங்காடுகள் *அரசு நிதியை வீணாவதை தடுப்பார்களா அதிகாரிகள்
பராமரிக்கப்படுமா *கோடை வெப்பத்தால் வாடி கருகும் குறுங்காடுகள் *அரசு நிதியை வீணாவதை தடுப்பார்களா அதிகாரிகள்
பராமரிக்கப்படுமா *கோடை வெப்பத்தால் வாடி கருகும் குறுங்காடுகள் *அரசு நிதியை வீணாவதை தடுப்பார்களா அதிகாரிகள்
ADDED : ஜூன் 19, 2024 04:46 AM
திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்டத்தில் -கோடை வெயிலில் வாடி கருகும் குறுங்காடுகளை பராமரித்து அரசு நிதி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளிலும், கடலாடி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளிலும் 2020ம் ஆண்டு புதிதாக குறுங்காடுகள் அமைக்கப்பட்டது. அப்போது ஊராட்சி நிர்வாகத்தினர் ஆர்வமுடன் பல இடங்களில் குறுங்காடுகளை வளர்த்தனர்.
நிழல் தரும் மரங்களான ஆவி, வேம்பு, புங்கன், வாகை, கொடுக்காப்புளி, பூவரசு, புளி உள்ளிட்ட பல்வேறு மரங்களை முறையாக குறுகிய இடைவெளியில் நட்டு பராமரித்து வளர்த்து வந்தனர்.
குறுங்காடுகளை தனியாக வளர்ப்பதற்கு என 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் ஊராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். தற்போது பெரும்பாலான ஊராட்சிகளில் குறுங்காடுகள் முறையாக பராமரிப்பின்றி பலன் தரும் நிலையில் இருந்த மரங்கள் கருகி வீணாகி வருகிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறுங்காடுகள் வளர்க்கப்பட்டன.
குறுகிய இடைவெளியில் நெருக்கமாக வளர்க்கப்படும் மரங்கள் ஒரே நேரத்தில் பசுமையாக காட்சி தரும் போது அவை மேகக்கூட்டங்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாக மாறுகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட குறுங்காடுகள் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் ஊற்றாததாலும், கோடை வெயிலின் தாக்கத்தால் கருகி வருகின்றன.
இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் உரிய முறையில் பாதுகாக்கப்பட்ட அடர்வன குறுங்காடுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைத் தொடர்ந்தால் அரசு நிதி வீணடிக்கப்படும் நிலை ஏற்படும்.
எனவே இத்திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கருகும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து மீண்டும் பொலிவுடன் வளர்த்து பயன் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
---