/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பருத்தி பஞ்சு விலைச்சரிவு கிலோ ரூ.46க்கு விற்பனை பருத்தி பஞ்சு விலைச்சரிவு கிலோ ரூ.46க்கு விற்பனை
பருத்தி பஞ்சு விலைச்சரிவு கிலோ ரூ.46க்கு விற்பனை
பருத்தி பஞ்சு விலைச்சரிவு கிலோ ரூ.46க்கு விற்பனை
பருத்தி பஞ்சு விலைச்சரிவு கிலோ ரூ.46க்கு விற்பனை
ADDED : ஜூன் 19, 2024 04:52 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைச்சல் நேரத்தில் மழையால் பருத்தியில் பஞ்சு தரமில்லாததால் விலை சரிவடைந்து கடந்தாண்டு கிலோ ரூ.100க்கு விற்றது தற்போது ரூ.46க்கு விலை போகிறது.
மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் கண்மாய், ஊருணி பாசனத்தில் பருத்தி சாகுபடி நடக்கிறது. சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.
ராமநாதபுரம் கமிஷன் மண்டியில் விற்கப்படும் பஞ்சு மொத்த வியாபாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாண்டு சீசனில் பருத்தி விளைச்சல் இருந்த போதும் அறுவடை நேரத்தில் கோடை மழையால் வெடித்த பருத்தி தரம் குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்தது.
பூக்கள் உதிர்ந்தும், காய்களின் பருமன் குறைந்துள்ளது. இதனால் கடந்தாண்டு ரூ.100 விற்ற பஞ்சு தற்போது கிலோ ரூ.46 முதல் ரூ.51க்கு விலை போகிறது. இவ்வாண்டு பருத்தி சாகுபடியில் மகசூல் குறைந்து எதிர்பார்த்த விலையும் கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.-----