ADDED : ஜூலை 09, 2024 04:55 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியான்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம் 33. இவர் அப்பகுதியில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வந்தார். ஜூலை 6 ல் வெளியூர் வியாபாரிகளிடம் நெல் விற்ற பணத்தை பெறுவதற்காக மனைவி காயத்ரியிடம் கூறி சென்றுள்ளார்.
இந்நிலையில் வெளியூர் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. கணவர் செல்வம் வீடு திரும்பாதது குறித்து மனைவி காயத்ரி புகாரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.