/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ADDED : ஜூலை 09, 2024 04:55 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஸ்ரீராம் நகர் 2 வது தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தைதிருடிச் சென்றனர்.
ராமநாதபுரம் ஸ்ரீராம் நகர் 2 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி புஷ்பவள்ளி 43. இவரது கணவர் நாகராஜ் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் புஷ்பவள்ளி அடுத்த தெருவில் உள்ள தனது தங்கை இளவரசி வீட்டில் தங்கியிருந்தார்.
வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகைகள், இரண்டு ஜோடி வெள்ளிக்கொலுசு, ரூ.5000 பணத்தை திருடிச் சென்றனர். காலையில் வீட்டிற்கு வந்த புஷ்பவள்ளி பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் இருந்த நகை பணம், கொலுசு திருடப்பட்டது தெரிய வந்தது. ராமநாதபுரம் பஜார் போலீசில் புஷ்பவள்ளி புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.