/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
ADDED : ஜூலை 19, 2024 11:56 PM

திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் பாய்ந்து குடிநீர் வீணாகியது.
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை செல்லும் ரோட்டில் பல அடி துாரத்துக்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் நேரத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகளவு குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாகிறது.
அதிகளவு குடிநீர் வெளியேறுவதால் சில பகுதிகளில் குடிநீர் குறைவாக வருகிறது. தார் ரோடும் சேதமடையும் நிலை உள்ளது. வாகனங்கள் செல்வதிலும் பாதசாரிகள் கடந்து செல்வதிலும் சிரமம் நிலவுகிறது.
நேற்று காலை 11:00 மணிக்கு பல்வேறு ஆய்வு பணிக்காக அந்தப் பக்கமாக சென்ற திருவாடானை தாசில்தார் அமர்நாத் குடிநீர் உடைப்பபை பார்வையிட்டு பி.டி.ஓ., மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலருக்கு தெரிவித்தார்.