/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நன்றி கடிதம் எழுதி விடை பெற்ற ராமநாதபுரம் கலெக்டர் நன்றி கடிதம் எழுதி விடை பெற்ற ராமநாதபுரம் கலெக்டர்
நன்றி கடிதம் எழுதி விடை பெற்ற ராமநாதபுரம் கலெக்டர்
நன்றி கடிதம் எழுதி விடை பெற்ற ராமநாதபுரம் கலெக்டர்
நன்றி கடிதம் எழுதி விடை பெற்ற ராமநாதபுரம் கலெக்டர்
ADDED : ஜூலை 19, 2024 11:57 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் அரசுபொதுத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது கைப்பட பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கு நன்றிதெரிவித்து தமிழில் கடிதம் எழுதி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் மாற்றப்பட்டு அவருக்குப்பதிலாக நகராட்சிகளின் நிர்வாகஇணை கமிஷனர்சிம்ரன்ஜீத் சிங் காலோன் , இங்கு புதிய கலெக்டராகநியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மக்களுக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் அவரதுகைப்பட தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் 'ராமநாதபுரம் பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கலெக்டராக கடந்த ஒரு வருடம் இரண்டு மாதங்கள் பணி புரிந்துள்ளேன்.இக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனதுமனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்' எனகுறிப்பிட்டுள்ளார். இதனை ராமநாதபுரம் கலெக்டரின் அதிகாரப் பூர்வ முகநுாலில் வெளிட்டுள்ளார். இது தற்போது பரவிவருகிறது. இதை வரவேற்று அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.