/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 05:27 AM

முதுகுளத்துார் ; முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ் இயக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் 2 கி.மீ., நடந்து சடையனேரி ரோட்டில் காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர்.
பள்ளி, கல்லுாரி மற்றும் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் கிராம மக்கள் முதுகுளத்துார், சிக்கல் செல்கின்றனர். இதனால் தினந்தோறும் கூடுதல் பணம் செலவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:
சடையனேரி கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரியில் படிக்கின்றனர். மாணவர்கள் சென்று வர காலை, மாலை நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., நடந்து சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் செல்கின்றனர்.
இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் சடையனேரி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.